'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
ஒரு ஆக்சன் படம், ஒரு காமெடி படம் என்கிற பார்முலாவை நீண்டகாலமாக கடைபிடித்து வந்த கமல், தற்போது அதிலிருந்து மாறி விட்டார். இதுவரை தான் நடிக்காத வித்தியாசமான கதைகளில் ஆர்வம் காட்டுகிறார். அந்தவகையில், பாபநாசம் படத்தில் திருநெல்வேலி அண்ணாச்சியாக நடித்த கமல், இப்போது தூங்காவனத்தில் ஹாலிவுட் நடிகர்களுக்கு இணையாக ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளார். இதையடுத்து தனது புதிய படத்துக்காக முறுக்கு மீசை கெட்டப்பில் தயாராகிக்கொண்டிருக்கிறார்.
அது மட்டுமின்றி, விஸ்வரூபம் போன்ற பிரமாண்ட பட்ஜெட் படங்களில் நடித்துள்ள கமல், இப்போது 40 நாட்களுக்குள் படப்பிடிப்பை முடித்து தயாரிப்பு செலவை குறைக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், இதுவரை விளம்பர படங்களில் நடிக்காத கமல், இப்போது முதன்முறையாக ஒரு துணிக்கடை விளம்பரத்தில் நடித்துள்ளார். தீபாவளிக்கு முன்பு அந்த விளம்பரம் சேனல்களில் ஒளிபரப்பாகிறது. மேலும், அப்படி தான் முதன்முதலாக விளம்பர படத்தில் நடித்து சம்பாதித்த அந்த பணத்தை, அவர் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை கொடுத்து வரும் ஒரு டிரஸ்ட்டுக்கு கொடுத்துள்ளார். அதையடுத்து அதற்கான சான்றிதழும் கமலுக்கு வழங்கப்பட்டுள்ளதாம்.