பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கருப்பசாமி குத்தகைதாரர் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் மீனாட்சி. அதன்பிறகு டி.என் 07 ஏல் 4777, பெருமாள், ராஜாதி ராஜா, தோரணை, படங்களில் நடித்தார். கருப்பசாமி குத்தகைதாரர் தவிர மற்ற எந்த படங்களும் ஹிட்டாகவில்லை. கரு.பழனியப்பன் இயக்கி, நடித்த மந்திர புன்னகை படத்தில் நடித்தார். அதுவும் ஒடவில்லை. அகம் புறம் என்ற படம் வந்ததும் தெரியாது போனதும் தெரியாது. இதனால் சொந்த ஊருக்கு மூட்டை கட்டிச் சென்று விட்டார். இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் வந்தார். அப்போதும் வாய்ப்பு கிடைக்கவில்லை. துப்பாக்கி, வெள்ளக்காரதுரை படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடினார்.
இந்த நிலையில் நேர்முகம் என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ரஃபி என்ற புதுமுகம் ஜோடியாக நடிக்கிறார். முரளி கிருஷ்ணா இசை அமைத்து இயக்குகிறார். ஜெகதீஷ் வி.விஸ்வம் ஒளிப்பதிவு செய்கிறார்.
"நேர்முகத்தில் ஏழு ஜோடிகள் காட்டுக்குள் படும் பாட்டை வித்தியாசமான முறையில் படமாக்கியுள்ளேன். ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்பவர்கள் எவ்வகையான முடிவுக்கு உட்படுத்தபடுகிறார்கள் என்பதை காதல், செண்டிமெண்ட், த்ரில்லர், ஆக்ஷன், கிளாமர் கலந்து மகா கமர்சியல் கலவையாக நேர்முகம் படத்தின் கதையை வடிவமைத்துள்ளேன். இளைஞர்களையும், காதலர்களையும் டார்கெட்டாக வைத்து உருவாக்கப்படும் இப்படம் குடும்பங்களையும் சுண்டி இழுக்கும் மெசேஜுடன் கிளைமாக்ஸைத் தொடும்" என்கிறார் இயக்குனர் முரளி கிருஷ்ணா.