ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாபநாசம் படத்தில் வேஷ்டி அணிந்த கிராமத்து கெட்டப்பில் நடித்த கமல், தூங்காவனம் படத்தில் அதிரடி ஆக்சன் கதையில் நடித்துள்ளார். சமூகவிரோதிகளை துவம்சம் செய்யும் கதையில் நடித்திருக்கிறார். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள கமல், இன்றைய இளவட்ட ஹீரோக்களுக்கு இணையாக இளவட்ட ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் எனர்ஜிடிக்கான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாராம்.
அதேபோல், இந்த படத்தில் ஹாலிவுட் நடிகை போன்று காஸ்டியூம் அணிந்து நடித்துள்ள த்ரிஷா, கைரேகை நிபுணராக நடித்துள்ளார். க்ரைம் நடந்த இடங்களுக்கு சென்று அங்கு பதிந்துள்ள கைரேகையை பதிவு செய்து அவர்களை கண்டறிவதுதான் அவரது கதாபாத்திரமாம். அந்த வகையில், கமல், த்ரிஷா இருவருக்குமே குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் கதாபாத்திரம்தானாம்.
மேலும், ஒரு குற்றவாளியை ஒரு இரவுக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்கிறபோது கமல்-த்ரிஷா இருவருமே அதிரடியாக களமிறங்கி அந்த நபரை பிடிப்பார்களாம். அப்போது ஒரு அதிரடியான சண்டை காட்சி உள்ளதாம். அந்த காட்சியில் கமலுடன் சேர்ந்து த்ரிஷாவும் பறந்து பறந்து எதிரிகளை தாக்குவாராம். இந்த காட்சியில் கமலைப்போலவே த்ரிஷாவும் ரோப்பில் தொங்கியபடி கஷ்டப்பட்டு நடித்திருப்பதாக தூங்காவனம் யூனிட் தெரிவிக்கிறது.