Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாரா இல்லன்னா ஹன்சிகா! -ஜி.பி.பிரகாஷின் அடுத்த டார்கெட்

02 அக், 2015 - 12:14 IST
எழுத்தின் அளவு:
GV-Prakashs-next-target-Hansika

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் முதலில் நாயகனாக நடித்த பென்சில் படத்தில் அப்போது பல படங்களில் நடித்து வளர்ந்து கொண்டிருந்த ஸ்ரீதிவ்யா நடித்தார். அதையடுத்து டார்லிங் படத்தில் மலையாளம், தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்த நிக்கி கல்ராணி நடித்தார். அவர்களைத் தொடர்ந்து அவர் நடித்த த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் கயல் ஆனந்தியும், மனீஷா யாதவும் நடித்தனர். படத்தில் பல காட்சிகளில் ஆபாசமான டயலாக்குகள் இருந்தபோதும் மொழி தெரியாத அவர்கள் அது என்னவென்றே புரியாமல் நடித்தனர். ஆனால், படம் வெளியான பிறகுதான் நாம் ஒரு பிட் படத்தில் நடித்திருக்கிறோம் என்பது அவர்களுக்கே தெரியவந்தது. இதை மனீஷா பொறுத்துக்கொண்டபோதும், கயல் ஆனந்திதான் பொங்கி எழுந்து விட்டார். எனது இமேஜை இப்படி கெடுத்து விட்டீர்களே என்று அப்பட டைரக்டருடன் மோதினார். ஆனால், இப்போது அப்படம் எதிர்பாராத வகையில் வெற்றிகரமாக ஓடிக்கெண்டிருப்பதால் அவர்களின் எதிர்ப்பு அனைத்துமே அடங்கிவிட்டது. அதோடு ஜி.வி.பிரகாசும் கமர்சியல் ஹீரோ அந்தஸ்தை பெற்று விட்டார்.


இந்தநிலையில், தொடர்ந்து கமர்சியல் கதைகளாக நடித்து தனது மார்க்கெட்டை ஸ்டெடி பண்ணிக்கொள்ள வேண்டும் என்று அவ்வப்போது இளவட்ட டைரக்டர்களிடம் கதையும் கேட்டு வரும் அவர், தற்போது புருஸ்லீ படத்தில் நடிக்க முதலில் நயன்தாராவை கேட்டார். ஆனால் அவர் எக்குத்தப்பாக சம்பளம் கேட்டு நழுவிக்கொண்டார். அதையடுத்து த்ரிஷா இல்லன்னா நயன்தாரா என்பது போன்று, நயன்தாரா இல்லன்னா ஹன்சிகா என்று அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவரோ, ஆபாச நடிகை இமேஜ் எனக்கு வேண்டவே வேண்டாம் என்று சொல்லி எஸ்கேப்பாகி விட்டாராம். இருப்பினும் ஹன்சிகாவை விடாமல் அவர் துரத்திக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in