தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டோலிவுடில் பிரபலமான அக்கினேனி குடும்பத்திலிருந்து நாயகனாக நடிக்க வருபவர் அக்கினேனி நாகார்ஜுனா - அமலா தம்பதியரின் மகன் அகில். இயக்குனர் விவி விநாயக் இயக்கும், தி பவர் ஆப் ஜுவா படத்தில் நாயகனாக நடிக்கும் அகிலுக்கு ஜோடியாக நடிகை சேஷா சைகள் நடிக்கின்றார். இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் அடுத்து இப்படத்தின் டிரைலர் வெளிவரவுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ள அகில் படத்திற்கு தற்போது புரமோஷன் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
அமெரிக்காவில் நடைபெற்ற இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அகிலை நடிகர் பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் கோபப்படுத்தியுள்ளனர். அகில் பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரசிகர்கள் ஜெய் அக்கினேனி அல்லது ஜெய் அக்கினேனி நகேஷ்வர ராவ் என வாழ்த்தொலி எழுப்புவதற்கு பதிலாக டோலிவுட்டின் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணாவை வாழ்த்தி ஜெய் பாலைய்யா என கோஷமிட்டுள்ளனர். இதனைக் கேட்டு கோபமடைந்த அகில் ஒன்றும் சொல்ல முடியாமல் அவ்விடத்தை விட்டு வெளியேறி விட்டாராம்.