அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
விஜய் நடித்துள்ள 'புலி' படம் தமிழ்நாட்டில் வருமான வரிச் சிக்கலில் சிக்கி நேற்று காலை பல திரையரங்குகளிலும், நண்பகல் காட்சிக்கு மற்ற திரையரங்குகளிலும் வெளியானது. படம் பற்றிய இரு வேறு விதமான கருத்துகள் பரவி வரும் நிலையில் தெலுங்கில் இப்படம் வெளியாவது ஒரு நாள் தள்ளி இன்றுதான் வெளியாகிறது.
குழந்தைகளை இந்தப் படம் அதிகம் கவரும் என்று தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். வழக்கமான விஜய் படத்தை எதிர்பார்த்து தியேட்டருக்கு வரும் அவருடைய ரசிகர்களுக்கு இந்தப் படம் கொஞ்சம் ஏமாற்றமாகவே இருக்கும். ஆனால், குடும்பத்தினரும், குழந்தைகளும் கண்டிப்பாகப் படத்தை ரசித்துப் பார்க்கலாம் என நடுநிலையான ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.
சில தெலுங்கு வினியோகஸ்தர்களிடமிருந்து வர வேண்டிய பணம் கால தாமதமாக வந்ததால் ஆந்திரா, தெலுங்கானா உட்பட தெலுங்கு பேசும் இரண்டு மாநிலங்களிலும் நேற்று வெளியாகாமல் போய்விட்டது. நேற்று மாலைக்குள் அந்தப் பிரச்சனைகள் முடிவடைந்து இன்று படத்தை வெளியிடுகிறார்கள். இதனால் படத்தின் முதல் நாள் ஓபனிங் கலெக்ஷனுக்கு நன்றாகவே பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இருந்தாலும் இன்று விடுமுறை தினம் என்பதால் இன்றும், நாளையும், நாளை மறுநாளும் தெலுங்கிலும் இப்படம் வசூலை அள்ளும் என்று எதிர்பார்க்கிறார்கள்.