Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அடுத்த எதிர்பார்ப்பு படம் எது ?

01 அக், 2015 - 18:10 IST
எழுத்தின் அளவு:
What-is-Next-expected-movie

தமிழ்த் திரையுலகில் பெரி நடிகர்கள் நடிக்கும் படங்கள்தான் வழக்கமாக அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அப்படி ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'புலி' படம் திரைக்கு வந்துவிட்டது. அடுத்து எந்தப் படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது எனப் பார்த்தால் தற்போதைக்கு மூன்று படங்களைச் சொல்லலாம்.


அதில் முதலில் வெளியாகவிருப்பது '10 எண்றதுக்குள்ள'. படத்தின் தலைப்பிலேயே ஏதோ ஒன்றைச் சொல்ல வருகிறார் இயக்குனர் விஜய் மில்டன். 'கோலி சோடா' படத்திற்குப் பிறகு ஒரே ஜம்ப்பாக விக்ரம் நடிக்கும் ஒரு முழுமையான ஆக்ஷடன் படத்தை இயக்கி முடித்துள்ளார். அக்டோபர் 21ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


அடுத்தாக அஜித் நடித்து வரும் 'வேதாளம்'. 'வீரம்' படத்தைத் தொடர்ந்து இயக்குனர் சிவா , அஜித் மீண்டும் இணைந்துள்ள படம். படத்தின் தலைப்பே வித்தியாசமாக அமைந்து, கடந்த வாரம் வெளியான முதல் பார்வையும் வித்தியாசமாக அமைந்து படம் பற்றிய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. அஜித் கண்டிப்பாக ஒரு 'டான்' கதாபாத்திரத்தில்தான் நடித்திருப்பார் என்று படத்தின் முதல் பார்வையைப் பார்த்தே அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்த்திருக்கின்றனர். தீபாவளி விருந்தாக 'வேதாளம்' வர உள்ளது.


கமல்ஹாசன், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் ஒரு பரபரப்பான த்ரில்லர் படமாக எதிர்பார்க்கப்படும் படம் 'தூங்கவானம்'. மீண்டும் ஆக்ஷன் நடிப்பில் இறங்கியுள்ள கமல்ஹாசன் இந்தப் படத்தை ஹாலிவுட் படமளவிற்கு உருவாக்கியிருப்பார் என்றே பேசப்பட்டு வருகிறது. ராஜேஷ் எம் செல்வா படத்தை இயக்கினாலும் அதில் கமல்ஹாசனின் ஈடுபாடும் அதிகமிருக்கும் என்பதை சாதாரண ரசிகர்கள் கூட சொல்லி விடுவார்கள். இந்தப் படமும் தீபாவளி வெளியீடாக வர உள்ளது.


ஒரு மாதத்திற்குள் வெளிவர உள்ள இந்தப் படங்கள்தான் தற்போதைக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in