Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

விண்வெளியில் 'ட்ரெய்லர்' ரிலீஸ் ; குஞ்சாக்கோ போபன் படம் சாதனை..!

01 அக், 2015 - 17:30 IST
எழுத்தின் அளவு:
Kunchako-bhoban-movie-trailer-launch-in-space

டைட்டிலிலேயே குழப்பத்தை உண்டுபண்ணி, அதன்மூலம் ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதில் மலையாள இயக்குனர் அனில் ராதாகிருஷ்ணன் மேனன் புது ரூட்டை கையாளுபவர். இவர் இதற்கு முன்னர் இயக்கிய 'நார்த் 24 காதம்', மற்றும் 'சப்தமஸ்ரீ தஸ்கரா' ஆகிய படங்களிலும் இதே டெக்னிக்கை கையாண்டு இருந்தார். இந்த இரண்டு படங்களில் இவர் காட்டிய ஸ்டைல் தான் இப்போது அவரின் புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்போது அவர் தான் இயக்கியுள்ள புதிய படத்திற்கு வைத்திருக்கும் 'லார்ட் லிவிங்ஸ்டோன் 7௦௦௦ கண்டி' என்கிற டைட்டில் அந்த எதிர்பார்ப்பை இன்னும் தூண்டிவிட்டுள்ளது.


குஞ்சாக்கோ போபன், சன்னி வெய்ன், நம்ம ஊர் பரத், ரீனு மேத்யூஸ் ஆகியோர் நடிக்கும் இந்தப்படத்தை குளோபல் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. இயக்குனர் அனில் தனது படங்களில் காட்டும் வித்தியாசத்தைப்போலவே இந்தப்படத்தின் புரமோஷனிலும் காட்ட முடிவு செய்து, அதற்காக அவர் செய்த காரியம் தான் காண்போரையும் கேட்போரையும் தான் வாய்பிளக்க வைத்திருகிறது. மிகப்பிரமாண்ட அரங்கங்களில் ட்ரெய்லர், இசைவெளியீட்டு விழா நடத்திதானே பார்த்திருப்பீர்கள். ஆனால் முதன்முறையாக வான்வெளியில் ட்ரெய்லர் வெளியிட்ட அதிசயத்தை பார்த்திருக்கிறீர்களா..? ஆம் நேற்றைய தினம் இந்தப்படத்தின் ட்ரெய்லர் வானத்தில் வெளியிடப்பட்டுள்ளது..


எப்படி என்று கேட்கிறீர்களா..? ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன் ஒன்றில் இந்தப்படத்தின் ட்ரெய்லரையும், கூடவே கோ-ப்ரோ என்கிற கேமராவையும் ஒரு பாராசூட்டுடன் இணைத்து பறக்கவிட்டுள்ளார்கள். விண்வெளியில் வளிமண்டல பகுதியை எட்டியதும் இந்த பலூன் தானாகவே வெடித்து பாராசூட் கீழே இறங்கும்.. அப்படி இறங்கும்போது ஆட்டோமேடிக் புராகிராமின்படி படத்தின் ட்ரெய்லர் தானாகவே ஓடத்துவங்கும்.. அதுமட்டுமல்ல, உடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த கேமரா இந்த விண்வெளி பயணத்தை அப்படியே பதிவு செய்துகொள்ளுமாம். பாராசூட் கிட்டத்தட்ட 1௦௦ கி.மீ ஆரம் கொண்ட பரப்பளவிற்குள் தான் தரையிறங்கும் என்பதால், அதனை கண்டுபிடித்து எடுத்துவர, பல குழுக்கள் இதற்காக பிரித்து அனுப்பப்பட்டுள்ளன.. உலக சினிமா வரலாற்றிலேயே இப்படி ஒரு ட்ரெய்லர் லாஞ்ச் செய்வது இததான் முதன்முறை. படத்தின் மார்க்கெட்டிங் உத்திக்காக தயாரிப்பு நிறுவனம் இந்த முயற்சியை எடுத்துள்ளதாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in