'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தொழில் ரீதியில் போட்டியாளர்களாக விளங்கும் விஜய்யும், அஜித்தும் தனிப்பட்ட வாழ்க்கையில் நண்பர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். கடந்த வருடம் விஜய்க்கு பிரியாணி விருந்து வைத்து அசத்தினார் அஜித். அதே நேரம் விஜய்யும், அஜித்தும் திரையுலகில் எதிர் எதிர் துருவங்களாகவே இயங்கிக் கொண்டிருக்கின்றனர். புலி படத்தின் டிரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியானது. மிக சரியாய் அதே நாளில் அஜித் நடித்து வரும் தல 56 படத்தின் பெயரை அதாவது வேதாளம் என்ற டைட்டிலை அறிவித்தனர்.
வேதாளம் தலைப்பு அறிவிக்கப்பட்டதால் புலி படத்தின் டிரெய்லர் வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. புலி படத்தின் டிரெய்லர் ஏற்படுத்தி இருக்க வேண்டிய பரபரப்பை காலி பண்ணிய வேதாளம், அடுத்து புலி படம் வெளியாகும் நாளை குறிவைத்தது. விஜய் நடித்த புலி படம் இன்று வெளியாகவிருப்பது தெரிந்தே, புலி வெளியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் வேதாளம் படத்தின் டீஸரை வெளியிட தீர்மானித்தனர்.
இந்த செய்தியை வேதாளம் படத்தில் சம்மந்தப்பட்ட, பாடலாசிரியர் மதன் கார்க்கி ட்விட்டரில் நேற்றே வெளியிட்டார். புலி பட வெளியீட்டை முன்னிட்டு எக்கச்சக்க எதிர்பார்ப்போடும் மகிழ்ச்சியோடும் காத்துக் கொண்டிருந்த விஜய் ரசிகர்கள், வேதாளம் படத்தின் டீஸர் வெளியிட இருப்பதாக செய்தி வெளியானதும் கடுப்பானார்கள்.
இந்நிலையில் மதன் கார்க்கி சொன்னபடி நேற்று வேதாளம் படத்தின் டீஸர் வெளியிடப்படவில்லை. என்ன காரணம்?
வருமான வரி சோதனை காரணமாக புலி படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் வேதாளம் டீஸரை வெளியிட்டால் விஜய் தரப்பு அப்செட்டாகும் என்பதாலே வேதாளம் டீஸர் வெளியீட்டை தள்ளி வைத்ததாக சொல்கிறார்கள். அதையே சற்று உல்டாவாக, புலி படம் வெளியாகும்போதுதான் வேதாளம் படத்தின் டீஸரை வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்களாம். புலி ரிலீஸ் விஷயத்தில குழப்பம் நீடித்ததால்தான் வேதாளம் டீஸர் வெளியீட்டை கடைசி நேரத்தில் ஒத்தி வைத்தார்களாம்.