ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
பாகுபலி படத்திற்கு பின்னர் டோலிவுட் ரசிகர்கள் மீண்டும் ஒரு சரித்திர பயணத்திற்கு தயாராகி வருகின்றனர். இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள கஞ்சே படத்தின் முன்னோட்டக் காட்சிகளும் பாடல்களும் வெளிவந்து பெரும் வரவேற்பு பெற்றுள்ளன. இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள கஞ்சே படத்தில் நாயகனாக நடிகர் வருண் தேஜ் நடித்துள்ளார். நாயகியாக பிரக்யா ஜெய்ஸ்வால் நடித்துள்ளார்.
பஸ்ட் பிரேம்ஸ் என்டர்டையின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தணிக்கைக் குழுவினருக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் படக்குழுவினரைப் பாராட்டி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். நவம்பர் 6 ஆம் தேதி இப்படத்தை உலகம் முழுவதும் திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அதிக திரையரங்குகளில் வெளிவரவுள்ள இப்படத்தை தமிழ் மற்றும் ஹிந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.