'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடைபெற இருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கதேர்தலில் விஷால் அணிக்கு, நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வருகிற 18ந் தேதி தேர்தல் நடக்கிறது. தற்போதுள்ள தலைவர் சரத்குமார், ராதாரவி மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறி இளம் நடிகர்கள் விஷால் தலைமையில் தனி அணி அமைத்து போட்டியிட உள்ளனர். இரு அணியினரும் தீவிர பிரச்சாரத்திலும், ஓட்டு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ் சினிமாவில் இருக்கும் திரை நட்சத்திரங்களும், நாடக நடிகர்களும் ஒவ்வொரு அணியினருக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோர் எந்த அணிக்கும் ஆதரவு தருவார்கள் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது. இந்தச்சூழலில் நடிகர் விஷால் அணியினர் ஏற்கனவே நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினர்.
விஷால் அணியில் தலைவர் பதவிக்கு சரத்குமாரை எதிர்த்து நாசர் போட்டியிட இருக்கிறார். விஷால் தலைமையிலான பாண்டவர் அணிக்கு நடிகர் கமல்ஹாசன் தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார். அதோடு நாசரின் வேட்புமனுவையும் கமல் முன்மொழிந்தார். கூடவே நடிகை கெளதமியும் வழிமொழிந்தார்.
முன்னதாக தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் சரத்குமார் மற்றும் துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் விஜயகுமார் இன்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இன்றோ அல்லது நாளையோ விஷால் அணியினர் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்யப்படலாம் என தெரிகிறது.