தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒரு படம் வெற்றியடைந்தால் அப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு விஷயமும் பாசிட்டிவ்வாக பார்க்கப்படும். குறிப்பாக, அப்படத்தில் நடித்த நட்சத்திரங்கள் நடை உடை பாவனை தொடங்கி அவர்களின் ஹேர்ஸ்டைலையும் மக்கள் பின்பற்றுவார்கள். அதே படம் தோல்வியடைந்துவிட்டால் அப்படத்தில் இடம்பெற்றுள்ள எதையும் மக்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். அது மட்டுமல்ல ராசியில்லாத விஷயமாகவே அதை பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். சூர்யா நடித்த மாசு என்கிற மாசிலாமணி படத்தில் படு தோல்வியடைந்தது. இந்தப் படத்தில் சூர்யாவின் ஹேர்ஸ்டைல் சற்று வித்தியாசமாக இருந்தது. ஆனாலும் படம் தோல்வியடைந்ததினால் அதை யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில் தற்போது சூர்யா நடித்து வரும் 24 படத்திலும் அதே ஹேர்ஸ்டைலையே வைத்திருக்கிறார். 24 படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட செல்பியில் சூர்யாவின் இந்த ஹேர்ஸ்டைல் ரகசியம் வெளியாகி இருக்கிறது. அதைப் பார்த்த சூர்யாவின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தோல்விப்படத்தின் ஹேர்ஸ்டைலையே 24 படத்துக்கும் வைக்க வேண்டுமா? மாசு என்கிற மாசிலாமணி படத்தின் தோல்வி சென்ட்டிமெண்ட் 24 படத்தையும் பதம் பார்த்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.