இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைப்போல், இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு, ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி வருகிற 3-ஆம் தேதி முதல் டிசம்பர் 20-ஆம் தேதி வரை நடக்கிறது. கிரிக்கெட்டைப்போலவே கால்பந்து போட்டியையும் பிரபலப்படுத்த சினிமா நட்சத்திரங்களை உதவிக்கு அழைத்துள்ளனர்.
ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் போட்டியின் இந்த சீசனுக்கான விளம்பர தூதராக நடிகர் தனுஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் கால்பந்து போட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஆட்டத்தை பிரபலப்படுத்தும் பணியில் ஈடுபடுவார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் தனுஷை பிராண்ட் அம்பாசடராக்குவதன் மூலம் ஸ்பான்சர்களும் அதிகளவில் கிடைப்பார்கள் என்பதும் ஒரு காரணம். 'ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி சம்பந்தமாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார் தனுஷ்.
''சிறுவயது முதலே நான் கால்பந்து விளையாட்டு ரசிகன். என் வீட்டருகில் இருக்கிற தெருக்களில் எல்லாம் கால்பந்து விளையாடியிருக்கிறேன். 90 நிமிடங்கள் எல்லோரும் சேர்ந்து விறுவிறுப்பாக ஆடும் இந்த விளையாட்டு எனக்கு ரொம்பவும் பிடிக்கும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். நம் நாட்டில் கிரிக்கெட் விளையாட்டுக்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இப்போது கால்பந்து விளையாட்டு மீதும் மக்களுக்கு ஆர்வம் கூடியுள்ளது. இது மகிழ்ச்சி தரும் விஷயம்'' என்ற தனுஷ், ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிக்கு தன்னை விளம்பர தூதராகா நியமித்திருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் சொன்னார்.
உங்களுக்கு மிகவும் பிடித்த கால்பந்தாட்ட வீரர் யார் என்று கேட்டபோது. 'மெர்சி' என்று பதில் அளித்தார் தனுஷ். 'இந்திய அளவில் உங்களுக்குப் பிடித்த மிகவும் பிடித்த கால்பந்தாட்ட வீரர் யார்? என்று கேட்டபோது, ''அப்படி யாரும் இல்லை'' என்று தனுஷ் பதில் அளித்தைக் கண்டு ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் போட்டியின் அமைப்பாளர்களே அதிர்ச்சியடைந்தனர்!