தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'வீரம்' சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்கும் 'வேதாளம்' படத்தின் பெயர் கடந்த புதன் அன்று நள்ளிரவு 12 மணிக்கு அறிவிக்கப்பட்டது. அந்த வித்தியாசமான டைட்டிலை அஜித் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். தமிழின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான அஜித் படத்துக்கு 'வேதாளம்' என்ற பெயரா என பலர் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் படத்தில் அஜித்தின் கதாபாத்திரத்திற்கும் படத்தின் டைட்டிலுக்கும் பொருத்தம் உள்ளது என படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.
இதனிடையே 'வேதாளம்' டீசர் இன்றிரவு வெளியாக உள்ளதாக பாடலாசிரியர் மதன் கார்க்கி டிவிட்டரில் ஒரு பதிவைப் போட்டுள்ளார். “வேதாளம்' படத்தின் அற்புதமான டீசரைப் பார்த்தேன். இயக்குனர் சிவா மற்றும் குழுவினர் சிறப்பாக செய்துள்ளனர். இன்றிரவு டீசர் வெளியீடைப் பார்க்க ஆவலுடன் காத்துள்ளேன்,” என மதன் கார்க்கி பதிவு செய்துள்ளார்.
படத்தின் தயாரிப்பாளரோ, இயக்குனரோ, பிஆர்ஓ-வோ எதுவும் தெரிவிக்காத நிலையில் மதன் கார்க்கி 'வேதாளம்' டீசர் பற்றி ஒரு பிஆர்ஆ- போல செய்தி வெளியிட்டுள்ளது படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், இன்றிரவு டீசர் வெளிவர வாய்ப்பில்லை என்றே சொல்கிறார்கள். அதற்கான தேதி பின்னர் முறைப்படி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. ஒரு வேளை டிவிட்டர் டிரென்டிங்கில் வருவதற்காக இப்படி முன்கூட்டியே மதன் கார்க்கி அறிவித்திருப்பாரோ....?