பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
2வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் (ஐ.எஸ்.எல்) வருகிற அக்டோபர் 3ந் தேதி முதல் டிசம்பர் 20ந் தேதி பல்வேறு நகரங்களில் நடக்க இருக்கிறது. இதன் தூதர்களில் ஒருவராக நடிகர் தனுஷ் நியமிக்கப்பட்டிருக்கிறார். கால்பந்து போட்டியை பிரபலப்படுத்துதல், அதற்கான விளம்பர படங்களில் நடித்துக் கொடுத்தல் போட்டியில் கலந்து கொண்டு பார்வையாளர்களை உற்சாகப்படுத்துதல் போன்றவை விளம்பர தூதரின் பணியாகும். இதற்கான அறிவிப்பை நேற்று ஐ.எஸ்.எல் வெளியிட்டது.
பின்னர் இதுகுறித்து தனுஷ் கூறியதாவது: நான் ஒரு தீவிர கால்பந்து ரசிகன். சிறு வயதில் தெருக்களில் விளையாடி இருக்கிறேன். மைதானங்களில் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் தூதராகும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. 90 நிமிட விறுவிறுப்பான கால்பந்து போட்டிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த ஆண்டுகள் போட்டிகள் விறுவிறுப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். நம் நாட்டில் கிரிக்கெட்தான் பிரபலமாக உள்ளது. இந்த போட்டிகளுக்கு பிறகு கால்பந்தும் கிரிக்கெட்டுக்கு நிகரான இடத்தை பிடிக்கும் என்று நம்புகிறேன். சினிமாவில் கால்பந்து வீரனாக நடிக்கும் ஆசை இருக்கிறது. அதற்கான வாய்ப்பு வரும்போது நடிப்பேன். அதற்கான தகுதி எனக்கு இருப்பதாக நம்புகிறேன். என்றார் தனுஷ்.