'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் |
இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த தனி ஒருவன் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பில் வெற்றி நடை போட்டு வருகின்றது. இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளதாகவும் டோலிவுட்டின் மெகா பவர் ஸ்டார் நடிகர் ராம் சரண் இதில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இயக்குனர் மோகன் ராஜா தெலுங்கிலும் தனி ஒருவன் படத்தை இயக்குவார் என கூறப்பட்ட நிலையில் டோலிவுட் இயக்குனர் சுரேந்தர் ரெட்டி தனி ஒருவன் படத்தை தெலுங்கில் இயக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
கிக், ரேஸ் குர்ராம் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய சுரேந்தர் ரெட்டி கடைசியாக இயக்கிய கிக் 2 படம் தோல்வியைத் தழுவியது. அப்படத்திற்கு பின்னர் ராம் சரணின் அடுத்த படத்தை இயக்கவிருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. தற்போது ராம் சரண் சம்மதத்தின் பெயரில் தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்கை சுரேந்தர் ரெட்டி இயக்கவுள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகின்றது. மேலும் இப்படத்தில் காஜல் அகர்வாலை ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றதாம். மகதீரா, நாயக், யேவடு போன்ற படங்களில் ஜோடி சேர்ந்த ராம் சரண்-காஜல் அகர்வால் இணை இப்படத்தின் வாயிலாக ஐந்தாவது முறையாக மீண்டும் சேர்ந்து டூயட் பாடவுள்ளனர்.