இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
இரானிய திரைப்பட இயக்குனரான மஜித் மஜிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள 'முகம்மது - தி மெசென்ஜர் ஆஃப் காட்' திரைப்படம் 88வது ஆஸ்கர் விருது போட்டிக்கு செல்கிறது. தேர்வுக்கு ஆறு படங்கள் கலந்து கொண்ட நிலையில் இந்தப் படம் தேர்வாகியுள்ளது. இரானிய திரையுலகில் இதுவரை செலவிடப்படாத அளவிற்கு அதிக பொருட்செலவில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்காக 40 மில்லியன் டாலர்கள் செலவழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆஸ்கர் விருதின் வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான பிரிவில் இரான் சார்பாக இந்தப் படம் அனுப்பப்படுகிறது. ஏற்கெனவே ஒரு சர்ச்சையை ஏற்படுத்திய இந்தப் படத்திற்கு இசையமைத்ததால் இசையமைப்பாளர் ரகுமானுக்கு 'பத்வா' விதிக்கப்பட்டது. அதன் பின் 'முகம்மது' படத்திற்கு இசையமைத்ததற்கான காரணத்தையும் ரகுமான் விளக்கமாகச் சொல்லியிருந்தார்.
'முகம்மது' படம் ஆகஸ்ட் மாத இறுதியில் இரானில் வெளியாகியுள்ளது. அங்கு 2 மில்லியன் டாலர்களை வசூலித்ததாகச் சொல்கிறார்கள். மஜித் மஜிதி இயக்கி வெளிவந்த 'சில்ட்ரன் ஆப் ஹெவன்' திரைப்படம் 1998ம் ஆண்டு ஆஸ்கர் விருதுப் போட்டியில் கலந்து கொண்டது. இரண்டாவது முறையாக மஜித் மஜிதி இயக்கியுள்ள படம் இப்போது ஆஸ்கர் போட்டிக்குச் செல்கிறது.
88வது ஆஸ்கர் விருதுப் போட்டிகள் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 28ம் தேதி நடைபெற உள்ளது.