Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நாகார்ஜூனா-ராஜமவுலி மோதல்!

29 செப், 2015 - 11:52 IST
எழுத்தின் அளவு:
Nagarjuna---Rajmouli-clash

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் இளைய மகன் அகில். அவர் அறிமுகமாகும் தெலுங்கு படத்திற்கும் அகில் என்றே பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. ஆனால் அந்த டிரைலருக்கு எதிர்பார்த்தபடி நல்ல ரிசல்ட் இல்லையாம். ட்ரைலர் சரியில்லை என்று பலரும் விமர்சித்துள்ளார்களாம். அதையடுத்து, அந்த ட்ரைலரை உருவாக்கிய ஷோ பிஸ்னஸ் என்ற விளம்பர நிறுனத்தை நடத்தி வரும் கார்த்திகேயன்தான் இந்த தவறான விமர்சனத்துக்கு காரணம் என்று நேரடியாக குற்றம் சாட்டியுள்ளாராம் நாகார்ஜூனா.


ஆனால் இதைக்கேட்டு பாகுபலி பட டைரக்டரான ராஜமவுலி டென்சனாகி விட்டாராம். காரணம், ஷோ பிஸ்னஸ் என்ற சினிமா விளம்பர நிறுவனத்தை நடத்தி வருபவர் அவரது மகன் கார்த்திகேயனாம். சினிமா சம்பந்தப்பட்ட டீசர், போஸ்டர், டிரைலர்களை உருவாக்கி கொடுப்பது தான் இந்த நிறுவனத்தின் வேலையாம். அந்த வகையில், அகில் படத்தின் ட்ரைலரை ரெடி பண்ணிக்கொடுத்தபோது அதைப்பார்த்த அப்படக்குழுவும், அகிலின் தந்தையான நாகார்ஜூனாவும் சிறப்பாக இருப்பதாகவே சொன்னார்களாம். ஆனால் டரைலருக்கு சரியான ரெஸ்பான்ஸ் இல்லை என்றதும் ட்ரைலர் சரியில்லை என்று கார்த்திகேயன் மீது பழியை தூக்கிப்போட்டு விட்டார்களாம்.


இதை கண்டித்துள்ள ராஜமவுலி, ட்ரைலரை முதலில் பார்த்து நன்றாக இருப்பதாக சொன்ன நீங்கள், இப்போது சரியான வரவேற்பு இல்லை என்றதும் என் மகன் மீது போழி போடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை தனது கருத்தினை வெளியிட்டுள்ளாராம். ஆனால், அதற்கு முன்புவரை கண்டபடி பேசிக்கொண்டிருந்த அகில் படக்குழுவும், நாகார்ஜூனாவும் இப்போது எதுவும் பேசாமல் அமைதியாகி விட்டார்களாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in