Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விளம்பர வருவாயை நன்கொடையாகத் தரும் கமல்ஹாசன் ?

29 செப், 2015 - 10:34 IST
எழுத்தின் அளவு:
Kamal-to-donate-Advertisment-income

கமல்ஹாசன் விளம்பரப் படம் ஒன்றில் நடிக்கப் போவதாக கடந்த வாரம் செய்திகள் பரவியது. பிரபல ஜவுளிக் கடை நிறுவன விளம்பரம் ஒன்றில் அவர் நடிக்கப் போவதாகவும், அதற்கு சில பல கோடிகளை அவர் சம்பளமாக வாங்க உள்ளார் என்றும் அந்தச் செய்தி வைரலாகப் பரவியது. ஆனால், கமல்ஹாசன் தரப்பிலிருந்து அது பற்றி இன்னும் எதுவும் சொல்லாமலே இருக்கிறார்கள். அதே போல அவர்கள் தரப்பிலிருந்து எதுவும் சொல்லாத இன்னுமொரு தகவலும் நேற்று முதல் பரவி வருகிறது. அந்த விளம்பர வருவாயில் வரும் முழுத் தொகையையும் கமல்ஹாசன் எச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக நன்கொடையாகத் தரப் போகிறார் என்ற செய்தி பரவி வருகிறது.


விளம்பரத்தில் நடிக்கப் போவதைப் பற்றியும், அந்த வருமானத்தை நன்கொடையாகத் தரப் போவதைப் பற்றியும் கமல்ஹாசன் தரப்பிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வராதவரை அவற்றைப் பற்றி உறுதியாகச் சொல்ல முடியாது. இதுவரை எந்த ஒரு விளம்பரத்திலும் நடிக்காத கமல்ஹாசன் விளம்பரப் படம் ஒன்றில் நடிக்கப் போகிறார் என்ற செய்தியே கடந்த வாரம் ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது. இப்போது கமல்ஹாசன் அந்த வருமானத்தை அப்படியே எச்ஐவி குழந்தைகளின் நலனுக்காகத் தரப் போகிறார் என்றால் அதைவிட ஆச்சரியம் எதுவுமில்லை. அப்படி ஒரு விஷயம் நடக்கப் போகும் பட்சத்தில் கமல்ஹாசன் மீதான இமேஜ் இன்னும் அதிகமாகும்.


எப்படியும் இது பற்றிய உறுதியாச செய்திகள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in