அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
காதல் கோட்டை, கோகுலத்தில் சீதை போன்ற படங்களை இயக்கியவர் அகத்தியன். இவரது மகள் விஜயலட்சுமி, வெங்கட்பிரபு இயக்கிய சென்னை 28 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து அஞ்சாதே, வெண்ணிலா வீடு, ஆடாம ஜெயிச்சோமடா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விஜயலட்சுமி, உதவி இயக்குநராக பெரரோஸ் கானை கடந்த ஐந்தாண்டுகளாக காதலித்து வந்தார். இந்த காதலை இருவரும் ரகசியமாக வைத்திருந்தனர். ஒருக்கட்டத்தில் தனது காதலை, தன் வீட்டில் சொல்லி திருமணத்திற்கு சம்மதம் வாங்கினார் விஜயலட்சுமி. இதனையடுத்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி பெரோஸ் - விஜயலட்சுமியின் திருமணம் இன்று(செப்., 28ம் தேதி) சிறப்பாக சிறப்பாக நடந்தது. இந்து முறைப்படி விஜயலட்சுமி கழுத்தில் தாலி கட்டினார் பெரோஸ். இந்த திருமணத்தில் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
பெரோஸ் ஈரம், வல்லினம் படங்களை இயக்கிய அறிவழகனிடம் உதவியாளராக பணியாற்றியவர். இவர் தற்போது ''பண்டிகை'' என்ற படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார். இதில் கிருஷ்ணா - கயல் ஆனந்தி நடிக்கின்றனர். இப்படத்தை தனது கணவருக்காக தயாரித்து, இதுநாள் வரை நடிகையாக இருந்தவர், இப்போது தயாரிப்பாளராகவும் உருவெடுத்திருக்கிறார் விஜயலட்சுமி.