இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பொதுவாக துறுதுறு கேரக்டர்களாகவே நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்த அனன்யாவுக்கு, மலையாளத்திலும் கூட அப்படிப்பட்ட ரோல்களே தேடிவந்தன. ஆனால் கடந்த வருடம் ஐந்து ஹீரோயின்களில் ஒருவராக அவர் நடித்திருந்த '1௦௦ டிகிரி செல்சியஸ்' படம் சீரியஸான ரோலிலும் அவர் சரியாக பொருந்துவார் என காட்டியது. இந்தப்படத்தில் அனன்யாவுடன் ஸ்வேதா மேனன், மேக்னா ராஜ், பாமா ஆகியோரும் நடித்திருந்த இந்தப்படம் தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் ரீமேக்காக இருக்கிறது.
எந்த மொழிக்கும் செட்டாக கூடிய த்ரில்லர் வகையை சேர்ந்தது இந்தப்படம். வேலைக்குச்செல்லும் ஐந்து பெண்கள் ஒன்றாக தங்கியிருக்கும் அபார்ட்மென்ட்டில் அவர்களது பிளாட்டில் ஒரு மரணம் நிகழ்கிறது. அதை அவர்கள் யாருக்கும் தெரியாமல் மறைக்க முற்படுவதும், அதை தெரிந்துகொண்ட யாரோ ஒருவன் அந்த ஐந்து பேரையும் ஒருவர் அறியாமல் இன்னொருவரை மாறி மாறி பிளாக் மெயில் செய்வதும் தான் படத்தின் கதை.. ராகேஷ் கோபன் என்பவர் இந்தப்படத்தை இயக்கியிருந்தார்.