சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
விஜய்-விக்ரம் இருவரும் சினிமாவை தாண்டி நெருங்கிய நண்பர்கள். ஒருவர் நடித்த படத்தை ஒருவர் பார்த்து விட்டு நிறைகுறைகளை ஓப்பனாக பேசும் அளவுக்கு நண்பர்கள். அதோடு, விஜய் தனது பேமிலியுடன் விக்ரம் வீட்டிற்கும், விக்ரம் தனது பேமிலியுடன் விஜய் வீட்டிற்கும் செல்வதுண்டு. அப்படிப்பட்ட நண்பர்களாக இருந்தபோதும் இதுவரை அவர்கள் எந்த படத்திலும் இணைந்து நடிக்கவில்லை. ஆனால், தற்போது ஒரு படத்தில் அவர்கள் இணைகிறார்கள்.
அதாவது, வருகிற அக்டோபர் 1-ந்தேதி விஜய்யின் புலி படம் உலகமெங்கிலும் ரிலீசாகிறது. அதையடுத்து அந்த படத்தை வரவேற்க விஜய்யின் ரசிகர்கள் தயாராகிக்கொண்டிருக்கிறர்கள். அதேபோல் கோலிசோடா விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் பத்து எண்றதுக்குள்ள. இந்த படத்தின் அனைத்துக்கட்ட வேலைகளும் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி விட்டது. அக்டோபர் 21-ந்தேதி இப்படம் ரிலீசாகிறது.
இந்த நிலையில், அப்படத்துக்கு பரபரப்பு கூட்டும் முயற்சியாக. அக்டோபர் 1-ந்தேதி வெளியாகும் விஜய்யின் புலி படத்துடன் விக்ரமின் பத்து எண்றதுக்குள்ள படத்தின் ட்ரெய்லரும் வெளியாகிறதாம். விக்ரம் விஜய்க்கு நண்பர் என்பதோடு, பத்து எண்றதுக்குள்ள படத்தை தயாரித்திருப்பது விஜய்யின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் என்பதால் இந்த விசயம் உடனடியாக ஓகே ஆகிவிட்டதாம். ஆக, புலி வெளியாகும் தியேட்டர்களில் அப்படத்தோடு விக்ரமின் ட்ரெய்லரையும் வரவேற்ப அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்திருக்கிறார்கள்.