Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுஷ் இடத்தைப் பிடிக்கிறாரா ஜி.வி.பிரகாஷ்குமார் ?

28 செப், 2015 - 07:53 IST
எழுத்தின் அளவு:
IS-GV-Prakash-trying-to-catch-Dhanush-place

இசையமைப்பாளராக இருந்து நாயகனாக மாறியுள்ள ஜி.வி.பிரகாஷ்குமார் தன்னுடைய 'டார்லிங், த்ரிஷா இல்லனா நயன்தாரா' ஆகிய இரண்டு படங்களின் வெற்றியால் திரையுலகையே திகைக்க வைத்திருக்கிறார். பொங்கலுக்கு வெளிவந்த மற்ற படங்களைக் காட்டிலும் ஜி.வி.பிரகாஷ் நடித்து வெளிவந்த 'டார்லிங்' திரைப்படம் வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் லாபமான படமாக அமைந்தது. அதற்குப் பிறகு சமீபத்தில் வெளியான 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படம் அதை விட லாபமாக அமைந்து வருகிறது என்கிறார்கள். ஒரே ஆண்டில் ஒரு புதிய ஹீரோ நடித்து இரண்டு படங்கள் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தியிருப்பது சில ஹீரோக்களுக்கு ஆச்சரியத்தையும், பொறமையையும் கொடுத்திருப்பதாக கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.


ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகன் ஆனதிலும் தனுஷின் பங்கு மறைமுகமாக இருக்கிறதென்கிறார்கள். தனுஷ் நடித்த 'பொல்லாதவன், ஆடுகளம், மயக்கம் என்ன' உள்ளிட்ட சில ஹிட் படங்களுக்கு இசையமைத்தவர்தான் ஜி.வி.பிரகாஷ்குமார். ஆனால், அவர்களிருவருக்கும் ஏற்பட்ட ஏதோ ஒரு மனக் கசப்பால்தான் ஜி.வி. தானும் நடிகனாக வேண்டும் என்று முடிவெடுத்தார் என்கிறார்கள். ஜி.வியின் நல்ல நேரம் அவர் நடித்து வெளிவந்த இரண்டு படங்களுமே வெற்றிப் படங்களின் வரிசையில் இடம் பிடித்து விட்டது. இது யாருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதோ இல்லையோ கண்டிப்பாக தனுஷிற்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும் என்கிறார்கள்.


தனுஷின் ஆரம்ப காலப் படங்களான 'துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன்,' படங்களின் வரிசையில்தான் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படமும் இடம் பெற்றுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்தப் பலரும் தனுஷ் நடிக்க வேண்டிய ஒரு கதாபாத்திரத்தில்தான் ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கிறார் என்று சொல்கிறார்கள். ஆனால், இப்போது வளர்ந்துவிட்ட நிலையில் தனுஷ் இப்படி நடிப்பாரா என்று சொல்ல முடியாது. இருந்தாலும் ஜி.வி.பிரகாஷின் மனதில் தனுஷால் அவமானப்பட்ட சம்பவம் ஒன்று மட்டும் ஆழமாகப் பதிந்துள்ளது என்பது உறுதியாகச் சொல்ல முடியும். ஜி.வி.பிரகாஷைப் பலரும் ஆரம்ப கால தனுஷை ஞாபகப்படுத்துகிறார் என்றுதான் சொல்கிறார்கள்.


தனுஷிற்கும், ஜி.விக்கும் இடையில் நடந்த அந்த சம்பவம் என்ன என்பதை யார் முதலில் சொல்கிறார்கள் என்று பார்ப்போம். என்றாவது ஒரு நாள் வெளியில் வந்துதானே ஆக வேண்டும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in