Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'நான் வளர்க்கும் 31 குழந்தைகளே எனக்கு சந்தோஷம்!'

28 செப், 2015 - 03:45 IST
எழுத்தின் அளவு:

பாலில் தேய்த்த முத்துக்கள் போல பளிச்சென்ற முகம்; பாவம் பார்க்கும் குணம்; குழந்தைத்தனமான பேச்சு; குதுாகலிக்கும் சிரிப்பு... தமிழ் சினிமாவில் ரசிகர்களின், 'பல்ஸ்' பார்த்து நடிப்பவர் என, பெயரெடுத்த ஹன்சிகா, விரைவில் வெளிவர உள்ள, 'புலி' படம் பற்றியும், தன்னைப் பற்றியும், நம்மோடு பேசிய விவரம்:


புலி படத்தில் நடித்த அனுபவம்?


இளவரசி கேரக்டரில் நடித்துள்ளேன். தமிழ் டயலாக் சிலவற்றை மனப்பாடம் செய்து நடித்திருக்கிறேன். விஜய், ஸ்ரீதேவி, ஸ்ருதி, சுதீப்... இப்படி ஒரு பெரிய, 'டீம்' உடன் நடித்தது நல்ல அனுபவம்.


விஜயுடன், வேலாயுதம் மற்றும் புலி படத்தில் நடித்துள்ளீர்கள். புலி படத்தில் நடித்தபோது, விஜயிடம் வித்தியாசத்தை உணர முடிந்ததா?


அவரது இளமை கூடிக்கிட்டே வருது; அது, எப்படின்னு தெரியல. உடன் நடிப்பவர்களை அனுசரித்து நடந்து கொள்வார். ஒரு பெரிய ஸ்டாராக எப்பவுமே நினைத்ததில்லை. அவரோடு நடிக்க, எனக்கு எப்பவும் பிடிக்கும். அவருடைய குணம், மனசு, உதவி செய்வது எல்லாமே பிடிச்சிருக்கு.


புலி படத்தில் உங்க காஸ்ட்யூம், நகைகள் உங்களை இளவரசி போலவே காட்டியிருக்குமே?


நிச்சயமா அந்த காஸ்ட்யூம்ல அப்படித்தான் உணர்ந்தேன். வைர நகைகள் அணிந்திருந்தேன்; அந்த நகைகள், என்னை மேலும் அழகாக்கியது. காஸ்ட்யூம், ஹேர் ஸ்டைல், மேக்கப் இதற்காக பிரத்யேகமாக பார்த்து பார்த்து செய்தனர். திரையில் பார்க்கும் போது, நீங்களே பிரமிப்பீர்கள்.


'அரண்மனை - 1'ல் ஆன்ட்ரியா, 'அரண்மனை - 2'ல் த்ரிஷா, புலியில் - ஸ்ருதி, இப்படி இரண்டு ஹீரோயின்களுடன் நடிக்கும்போது உங்களுக்கான முக்கியத்துவம் இருக்குமா?எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை; படத்தில், என் ரோல் எவ்வளவு முக்கியம் என்று மட்டுமே பார்ப்பேன். மற்ற படி என்னோடு யார் யார் நடிக்கப்போறாங்கனு கேட்க மாட்டேன். நான் எல்லாரிடமும் நட்போடு பழக ஆசைப்படுபவள். சமீபத்தில், த்ரிஷா கூட நான் பேசி பழகியிருக்கேன்; அவங்க ரொம்ப, 'ஸ்வீட் ஆர்டீஸ்ட்!'


புதுப் படத்தில், ரஜினி நடிக்கும் போதெல்லாம், உங்க பேரும் லிஸ்ட்ல இருக்குமே; எப்போ, ரஜினியுடன் நடிக்கப் போறீங்க?


அந்த நாளுக்காகவே, நானும் காத்திருக்கேன். எப்போது, எனக்கு வாய்ப்பு கிடைத்தாலும், ரஜினியுடன் நடிக்க நான் ரெடி.


'சின்ன குஷ்பு' என்ற பெயர், உங்களுக்கு எந்த வகையில் பொருத்தமா இருக்கு?


ரசிகர்களிடம் எனக்கான அடையாளம்னு நினைக்கிறேன். யாருக்கு தான் குஷ்பு மேடத்தை பிடிக்காது சொல்லுங்க. அவங்க சூப்பர் ஆக்டர். ரசிகர்கள் என்னை சின்ன குஷ்புனு அழைப்பதில் சந்தோஷமே.


புலி படத்தில், ஸ்ரீதேவியுடன் நடித்த அனுபவம்; அவரிடம் இருந்து கற்றுக் கொண்டது?


ரொம்ப நல்ல அனுபவம். ரொம்ப திறமைசாலி நடிகை ஸ்ரீதேவி மேடம்; கேமரா முன்னால் வந்து நின்றால், அப்படி என்ஜாய் பண்ணி அவங்க நடிப்பதை பார்ப்பேன். புலி படத்தில், அவங்களுக்கு மகளா நடித்தது பெரிய சந்தோஷம். இந்த படம் எனக்கு ஒரு நல்ல அனுபவம்.


எப்போது சரளமாக தமிழ் பேசப் போறீங்க? விஜய் ஏதும் வார்த்தைகள் சொல்லிக் கொடுத்தாரா?


முன்பை விட இப்போது, என் தமிழ் பரவாயில்லைன்னு நினைக்கிறேன். என் வீட்டில் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசிட்டு இருக்கேன். விஜய் சார் ஸ்கிரிப்டில் எதுவும் சொல்லிக் கொடுப்பார். நான் தமிழில் எதுவும் கேட்டால், அப்படியா அப்படியான்னு கேட்பார்.


'வாங்க, வணக்கம்...; நல்லா இருக்கீங்களா...' என்ற வார்த்தைகள் எனக்கே தெரியும். படப்பிடிப்பில் எதுவும் சந்தேகம் கேட்டால், விஜய் சார் ரொம்பவே உதவி செய்வார். டான்ஸ், அப்பாடா... சான்சே இல்லை; கலக்கிடுவார். அவரோடு டான்ஸ் ஆட கொஞ்சம் ஜாலி தான்.


நீங்கள் இப்போது, எத்தனை குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறீர்கள்?


மொத்தம், 31 குழந்தைகள் இருக்காங்க; கிடைக்கும் நேரங்களில் அவர்களோடு இருப்பதை விரும்புகிறேன். எனக்கான சந்தோஷம் அவர்கள் தான் என்று கூட சொல்வேன்.


எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை?


ரசிகர்கள் விரும்பும், எந்த ரோலாக இருந்தாலும் அதில் நடிக்க


விரும்புகிறேன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in