பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வட நாட்டில் உள்ள பிரபல சாமியார் குர்மீத் ராம். இவர் ஒரு அதிரடி சாமியார். கடந்த ஆண்டு எம்.எஸ்.ஜி (மெசன்ஜர் ஆஃப் காட்) என்ற படத்தில் நடித்தார். அதில் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக நடித்து அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இயக்கம், தயாரிப்பு, இசை எல்லாமே அவர்தான். அந்தப் படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளிவந்தது.
தற்போது எம்.எஸ்.ஜி படத்தின் 2ம் பாகத்தை தயாரித்து இயக்கி நடித்துள்ளார். அவருடன் ரஹிம் சிங், அர்பித் ரங்கே, ஹோனிபிரீத் ரங்கே உள்பட பலர் நடித்துள்ளனர். அரவிந்த் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற அக்டோபர் 1 ந் தேதி வெளிவருகிறது. முதல் பாகத்தைப்போல இந்தப் படமும் தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவருகிறது.