'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஏராளமான படங்களில் கவர்சிகரமான வேடத்தில் நடித்தவர் சோனா. இடையில் சில காலம் நடிப்பதை விட்டு விலகி இருந்தவர் இனி கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இதுப்பற்றி அவர் கூறியதாவது... அப்படி இப்படி என்று கவர்ச்சியை காட்டி 75 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். எல்லா மொழிகளிலுமே எல்லாப் பிரபல நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். எனக்கே கவர்ச்சியாக நடித்து போரடித்து விட்டது. இனி அப்படி இப்படி நடிப்பதில்லை என முடிவெடுத்திருக்கிறேன். கேரக்டர் ரோலில் மட்டுமே நடிக்க முடுவெடுத்திருக்கிறேன். கதை எழுதுவதற்கு முன்பு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கிற நீங்கள், குணசித்திர கேரக்டர்ன்னு வரும் போது சோனா என்று எழுதி என்னை அழையுங்கள் நான் நல்ல கேரக்டர்களில் நடிக்க காத்திருக்கிறேன் என்றார் சோனா.