மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
தமிழ்த் திரையுலகத்தில் முத்தக் காட்சிகளைப் புகழ் பெற வைத்ததில் கமல்ஹாசனுக்குத்தான் முக்கியப் பங்குண்டு. 80களில் இளமை ததும்பும் பல காதல் கதைகளில் நடித்த கமல்ஹாசன் அப்போது தன்னுடன் நடிக்கும் சில கதாநாயகிகளுக்கு சில படங்களில் முத்தம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர். அன்றிலிருந்து இன்று வரை அப்படிப்பட்ட காட்சிகளில் அவரைத் தவிர வேறு யாரும் புகழ் பெற முடியவில்லை.
கமல் தற்போது நடித்து வரும் 'தூங்காவனம்' படத்தின் முதல் பார்வை வெளியான போது அவர் யாரோ ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுப்பது போன்ற போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டது. அந்தப் பெண் யாரென்று தெரியாத அளவிற்கு பெண்ணின் முகத்தை மறைத்துக் கொண்டு கமல் முத்தம் கொடுப்பது போன்றே அந்த போஸ்டர் இருந்தது. படத்தில் நாயகியாக நடிக்கும் த்ரிஷாதான் அந்தப் பெண் என்று அப்போது ஒரு பேச்சு எழுந்தது. படத்தின் டிரைலர் வெளியீட்டின் போதும் கமல்ஹாசன் அது பற்றி எதுவும் பேசவில்லை.
இப்போது அந்த 'முத்தப் பெண்' யாரென்ற உண்மை வெளிவந்துள்ளது. படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மது ஷாலினிதான் அந்த முத்தப் பெண் என்கிறார்கள். அந்த ரகசியத்தை படம் வெளியாகும் வரை காப்பாற்றலாம் என்றிருந்தார்களாம். ஆனால், எப்படியோ அந்த ரகசியம் வெளியாகிவிட்டது . முத்தக் காட்சியாயிற்றே அதனால்தான் சத்தமில்லாமல் அந்த ரகசியம் வெளிவந்து விட்டதோ...!