அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சினிமா உலகைப்பொறுத்தவரை புற்றீசல்களைப் போன்று புதுமுக நடிகைகள் படையெடுக்கும் காலமிது. அதன்காரணமாகத்தான் பத்தில் எட்டு படங்களை புதுமுக நடிகைகளை ஆக்ரமித்துக்கொண்டு வருகின்றனர். இதனால் முன்னணி நடிகைகளுக்கான பட எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. என்றாலும், த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா போன்ற நடிகைகள்தான் ஓரளவு மார்க்கெட்டை ஸ்டெடி பண்ணிக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், அவர்களுக்கு அடுத்தபடியாக தமன்னாவும் நின்று கொண்டிருக்கிறார். ஆனபோதும், வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படத்தில் வழக்கம்போல் ஆர்யாவை காதலிக்கும் வேடத்தில் நடித்த அவருக்கு பாகுபலியில் காதலுடன் கூடிய புரட்சி பெண் வேடத்தைக் கொடுத்தார் ராஜமவுலி. தமன்னாவைப் பொறுத்தவரை அது ப்ரமோஷன்தான் என்றாலும், தொடர்ந்து மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க சிலர் தன்னை அணுகியபோது அதை தவிர்த்து விட்டாராம் தமன்னா.
காரணம், ரொமான்ஸ் இல்லாத வேடங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டால் அதன்பிறகு படிப்படியாக கேரக்டர் நடிகையாக்கி விடுவார்கள். ஆனால் கேரக்டர் நடிகையாகும் அளவுக்கு எனக்கொன்றும் வயதாகி விடவில்லை. இப்போதும் நான் இளவட்ட நடிகைதான். அதனால் இப்போதைக்கு ரொமான்டிக் கலந்த கதாபத்திரங்களிலேயே நடிக்க விரும்புகிறேன் என்று கூறிவிட்டாராம் தமன்னா.