ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சில சொந்த பிரச்னைகளில் சிக்கிய வசுந்தரா தற்போது சினிமாவில் எப்படியாவது ஒரு நல்ல இடத்தை பிடித்துவிட வேண்டும் என்பதற்காக தீவிரமாக நடித்து வரும் படம் புத்தன் இயேசு காந்தி. இந்தப் படத்தில் அவர் கொடூரமான கொலை குற்றவாளிகளை பேட்டி எடுக்கும் தொலைக்காட்சி நிருபராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அசோக் நடிக்கிறார். விஜய் ஆர்ம்ஸ்ட்ராங் ஒளிப்பதிவு செய்கிறார். வேத் சங்கர் இசை அமைக்கிறார். தூக்கு தண்டனை கைதியாக கிஷோர் நடிக்கிறார்.
இந்தப் படத்தில வசுந்தராவுக்கு நிறைய ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறது. கடந்த சிலநாட்களாக அவர் நடிக்கும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அண்ணா நகர் கோயம்பேடு, வடபழனி, மதுரவாயில் பூந்தமல்லி வரை அவர் வேகமாக கார் மற்றும் பைக் ஓட்டும் காட்சிகள் படமாக்கப்பட்டது. வசுந்தராவுக்கு கார் ஓட்டத் தெரியும் என்பதால் அந்த காட்சியில் எளிதாக நடித்து விட்டார். பட்ததுக்காக 10 நாட்கள் பைக் ஓட்ட கற்றக் கொண்டு நடித்துள்ளார். வெற்றிவேல் சங்கர் படத்தை இயக்குகிறார். படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.