'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே படங்களுக்கு பிறகு லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் மூன்றாவது படம் அம்மணி. இதில் லட்சுமி ராமகிருஷ்ணனே அம்மணியாக நடித்து இயக்கி இருக்கிறார். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒரு வயதான பெண்மணியின் வாழ்க்கை போராட்டம்தான் படத்தின் கதை.
இதன் படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. இதன் டீசர் வெளியீடு துபாய், குவைத் உள்ளிட்ட வெளிநாடுகளில் நடக்க இருக்கிறது. “இது மனித உணர்வுகளையும், மனித நேயத்தையும் பேசுகிற படம். படம் தொடங்கியது முதலே படத்திற்கு நல்ல ஆதரவு கிடைத்தது. எந்த தடையும் இல்லாமல் படப்பிடிப்பு முடிய தயாரிப்பாளர்கள் நல் ஆதரவை தந்தார்கள். தயாரிப்பாளர் வென் கோவிந்தாவுக்கு நன்றி. இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலிருந்தும் படத்துக்கு ஆதரவு பெருகி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.