இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
கடந்த வாரம் வெளியான ஜி.வி.பிரகாஷின் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படம் வெளியான அன்றே பல எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது. சினிமா வட்டாரத்தை சேர்ந்தவர்களே பிட் படம் எடுத்திருக்கிறார்கள் என்று சொன்னார்கள். அதனால் படத்துக்கு இந்த கருத்துக்கள் மைனசாக அமையும் என்றுதான் அப்படக்குழு பயந்தது. ஆனால், அந்த கருத்துக்களே இப்போது படத்தை வெற்றிபெற வைத்து விட்டது.
முக்கியமாக, விமர்சகர்கள் பிட் படம் என்று சொன்னதை ஜி.வி.பிரகாசும் மறுக்கவில்லை. விளைவு, இப்போது இளைஞர் பட்டாளம் அப்படத்தைப்பார்க்க படையெடுக்கத் தொடங்கி விட்டனர். ஆக, ஓடாது என்று நினைத்த படம் பெரிய அளவில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஜி.வி.பிரகாஷின் முந்தைய பட வசூலை முறியடித்து வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது த்ரிஷா இல்லன்னா நயன்தாரா.
மேலும், இன்று இரண்டாவது வாரத்தை தொட்டுள்ள அப்படத்தை கூடுதலாக 40 தியேட்டர்களில் இன்று முதல் திரையிடுகிறார்களாம். இந்த தகவலை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஜி.வி.பிரகாசும், டைரக்டர் ஆதிக் ரவியும் செம உற்சாகத்தில் உள்ளனர். அதோடு, தல யாரு என்ன சொன்ன என்ன, எங்க படம் தாருமாறு என்று அப்படக்குழுவினர் டுவிட் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும், வெளியான நான்காவது நாளிலேயே 10 கோடி வசூலித்த த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படம், பாக் ஆபீசில் பாகுபலி, ஸ்ட்ராபெரி, தனி ஒருவன், மாயா ஆகிய படங்களை பின்தள்ளி வசூலில் முதன்மை இடத்தை கைப்பற்றியிருக்கிறது.