Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கோவை சரளாவை தேடும் பேய் பட டைரக்டர்கள்!

24 செப், 2015 - 11:23 IST
எழுத்தின் அளவு:
More-demand-for-Kovai-sarala

லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா படத்திற்கு பிறகு கோவை சரளாவின் மார்க்கெட் சூடு பிடித்து நிற்கிறது. அதையடுத்து முனி-3யிலும் கோவை சரளாவை நடிக்க வைத்தார் லாரன்ஸ். அதேபோல் அரண்மனை படத்தில் அவரை நடிக்க வைத்த சுந்தர்.சி தற்போது இயக்கி வரும் அரண்மனை-2விலும் கோவை சரளாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த காமெடி வேடம் கொடுத்துள்ளார். இப்படி கோலிவுட்டில் தயாரான மெகா பட்ஜெட் பேய் படங்கள் மட்டுமின்றி சிறிய பட்ஜெட்டில் உருவாகும் பல படங்களிலும் அவர் நடித்துள்ளார். அதேபோல், இந்த படங்கள் தெலுங்கிலும் வெளியாகி வெற்றி பெற்றதால் இப்போது கோவை சரளாவுக்கு தெலுங்கும் பல படங்கள் கைவசம் உள்ளதாம். தமிழ் படங்களில் எப்படி அவரை பேய் படங்களில் காமெடி பண்ண வைக்கிறார்களோ அதே பாணியைதான் தெலுங்குப்பட டைரக்டர்களும் செய்கிறார்களாம்.


அந்த வகையில், படங்களில் வியாபாரங்களுக்கும் கோவை சரளாவின் காமெடி பயன்படுகிறதாம். அதனால் தற்போது சில சின்ன பட்ஜெட் தமிழ்ப்பட தயாரிப்பாளர்களும் கோவை சரளா இரண்டு நாள் தங்கள் படங்களில் நடித்தாலும் போதும் படத்தின் வியாபாரத்திற்கு பெரிய உதவியாக இருக்கும் என்று அவரிடம் கால்சீட் கேட்கிறார்கள். இதையறிந்து, பெரிய படங்களுக்கு கூடுதல் சம்பளம் கேட்கும் கோவை சரளா, சிறிய பட்ஜெட் படங்களாக இருக்கும்பட்சத்தில் அவர்களின் சூழ்நிலையை அறிந்து சம்பள விசயத்தில் முடிந்தவரை விட்டுக் கொடுத்து நடிக்கிறாராம். இதனால் அவரைத்தேடிச்செல்லும் பட்ஜெட் பேய் படங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in