ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அட்டகத்தி படத்தில் தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகை நந்திதா. முதல் படமே அவருக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்ததால் ராசியான நடிகை பட்டியலில் சேர்க்கப்பட்டார். பின்னர் எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி போன்ற படங்கள் அவருக்கு வெற்றிப்படங்களாக அமைந்ததால் கோலிவுட்டில் நந்திதாவுக்கென்று ஒரு இடம் கிடைத்தது.
அதன்காரணமாக இப்போது இடம் பொருள் ஏவல், அஞ்சலா, உப்புக்கருவாடு, புலி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் விஜய்யுடன் நடித்த புலி படத்தில் பழங்குடியின பெண் வேடத்தில் அவர் நடித்திருக்கிறார். அந்த வகையில் புலியில் நான் வருவது கொஞ்ச நேரமாக இருந்தாலும் மனதில் நிற்கிற வேடம் என்கிறார் நந்திதா.
இந்த நிலையில், தொடர்ந்து ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று இதுவரை கூறிவந்த நந்திதா, இப்போது மாறுபட்ட கதாபாத்திரங்கள் கிடைத்தாலும் நடிப்பேன் என்கிறார். குறிப்பாக, அஜீத்தின் 56வது படத்தில் அவரது தங்கையாக லட்சுமிமேனன், கபாலியில் ரஜினியின் மகளாக தன்ஷிகா போன்றோர் நடிப்பது போன்று முன்னணி ஹீரோக்களின் படங்களில் தங்கை, மகள் வேடம் கிடைத்தாலும் நடிப்பதற்கு நான் தயார் என்கிறார் நந்திதா. மேலும், தனது மனநிலையை இயக்குனர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக சில அபிமானத்திற்குரிய கோலிவுட் நண்பர்களிடம் இதை கூறி வரும் நந்திதா, கிராமத்து நடிகை என்று தன் மீது விழுந்திருக்கும் முத்திரையை மாற்றி சிட்டி சப்ஜெக்டுகளுக்கும் பொருத்தமான நடிகை என்கிற இன்னொரு இமேஜை ஏற்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார். அதோடு மிதமான கிளாமராக நடிக்கவும் தயாராக இருப்பதாக முன்மொழிந்து வருகிறார் நந்திதா.