ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு |
நடிகை அனுஷ்கா நடிப்பில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் ருத்ரமாதேவி படம் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளிவரவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு,தமிழ்,மலையாளம் மற்றும் ஹிந்தியில் திரைக்கு வரும் இப்படத்தில் நடிகை அனுஷ்கா காகதீய வம்ச தெலுங்கு ராணியான ருத்ரமாதேவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனுஷ்காவுடன் நித்யா மேனன், கேத்ரின் திரேஷா, அல்லு அர்ஜூன், ராணா, கிருஷ்ணம்ராஜூ, பிரகாஷ்ராஜ், சுமன், ஆதித்யா மேனன் போன்றோரும் நடித்துள்ளனர்.
தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவந்துள்ள இப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இப்படத்தின் தணிக்கை நிலவரம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ருத்ரமாதேவி படத்தின் தெலுங்கு பதிப்பைப் பார்த்த தணிக்கைக்குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான தணிக்கை சான்றிதழ் அடுத்த வாரம் வழங்கப்படும் என கூறப்படுகின்றது. 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட் செலவில் தயாராகியுள்ள இப்படத்தை இயக்குநர் குணசேகர் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.