இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சினிமாவில் தான் நடித்து சம்பாதிப்பதில் ஒரு பெரும்பகுதியை சமூக சேவைகளுக்காக செலவு செய்து வருகிறார் ஹன்சிகா. அந்த வகையில், மும்பையில் பல ஏழை சிறுவர் சிறுமிகளின் படிப்பு செலவுகளை ஏற்றிருக்கும் அவர், முதியோர் இல்லம் நடத்தி வருவதோடு, புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவியும் செய்து வருகிறார்.
அப்படி தன்னால் பராமரிக்கப்பட்டு வருபவர்களை அடிக்கடி மும்பை சென்று கவனித்து வரும் ஹன்சிகா, தனது பிறந்த நாள் மட்டுமின்றி, நோயாளிகளின் பிறந்த நாட்களையும் கேக் வெட்டி கொண்டாடி அவர்களை சந்தோசப்படுத்தி வருகிறார். ஹன்சிகாவின் இந்த சேவை மனப்பான்மை சினிமா வட்டாரங்களில் அவர் மீதான மதிப்பை இன்னும் உயர்த்தி விட்டுள்ளது.
மேலும், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக திருச்செந்தூர் சென்ற ஹன்சிகா, அங்கே மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட 10 பெண்களின் மருத்துவ செலவை தான் ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளாராம். அதையடுத்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த அவர், சிறப்பு பூஜைகள் நடத்தி விட்டு சென்னை திரும்பியிருக்கிறார்.