Advertisement

சிறப்புச்செய்திகள்

'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ஐ' படத்தின் அந்த 10,000 தியேட்டர் என்ன ஆயிற்று ?

22 செப், 2015 - 16:46 IST
எழுத்தின் அளவு:
Did-I-released-10000-theatres-in-China

2015ம் ஆண்டு ஆரம்பமான போது தமிழ்த் திரையுலகத்தில் 'ஐ' என்ற ஒற்றை எழுத்துப் படம் பற்றி தமிழில் உள்ள 247 எழுத்துக்களில் உள்ள அனைத்து எழுத்துக்களாலும் விதவிதமாக எழுதப்பட்டது. படம் வெளிவருவதற்கு முன் சில குறிப்பிட்ட பத்திரிகையாளர்களை மட்டும் அழைத்த படத்தின் தயாரிப்பாளர் 'ஐ' படம் உலகம் முழுவதும் 15,000 தியேட்டர்களில் வெளியாக உள்ளதாகவும் சீனாவில் மட்டும் 10,000 தியேட்டர்களில் வெளியாக உள்ளதாகவும் சொன்னார். சீன மொழியில் படம் 'டப்பிங்' செய்யப்பட்டு வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.


ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு ஹாலிவுட் நடிகர் ஆர்னால்ட்டையே அழைத்து வந்தவர்தானே அதனால் அவர் சொல்வதிலும் உண்மை இருக்கும் என்று இந்தியத் திரையுலகமும் மீடியாக்களும் நம்பின. படத்தைப் பற்றி பக்கம் பக்கமாக செய்திகள் வெளியாகின. இந்தியாவிலும், வழக்கமாகத் தமிழ்த் திரைப்படம் வெளியாகும் சில குறிப்பிட்ட நாடுகளிலும் 'ஐ' படம் வெளியானது. ஆனால், சீன மொழியில் டப்பிங் செய்யப்பட்டு சீனாவில் அந்த 10,000 தியேட்டர்களில் வெளியானதா என்பது மட்டும் தெரியவில்லை. ஒருவேளை நமக்குத் தெரியாமல் ஏதாவது வெளியாகியிருக்குமோ ?.


'பாகுபலி' படம் அடுத்து சீனாவில் வெளியாகப் போவதாகச் சொல்லியிருக்கிறார்கள், தொடர்ந்து 'புலி' படத்தையும் சீன மொழியில் டப்பிங் செய்து வெளியிட்டாலும் வெளியிடுவார்கள். ஸ்ரீதேவி வேறு பார்ப்பதற்கு சீன அரசி மாதிரி வேறு இருக்கிறார். ஒரு வேளை முன்னேற்பாடாக அப்படி ஒரு மேக்கப்பைப் போட்டிருப்பார்களோ ?. அது பற்றியெல்லாம் கூகுள் செய்து பார்த்துக் கொண்டிருந்த போதுதான் 'ஐ' படத்தின் அந்த 15,000 தியேட்டர் விவகாரம் நம் கண்ணில் பட்டது. சீனாவுல 'ஐ' படம் பார்த்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா?


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in