Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மீண்டும் வெளிச்சத்திற்கு வரும் 'அன்பு' பாலா..!

22 செப், 2015 - 15:48 IST
எழுத்தின் அளவு:
Actor-Bala-returns

தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தவர் பாலா. இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியான இவர் தமிழில் எதிர்பார்த்த மாதிரி வாய்ப்புகள் அமையாமல் போனதால், பல வருடங்களுக்கு முன்னாடியே மலையாள சினிமா பக்கம் சென்றவர். 2012 வரை வருடத்திற்கு நான்கு படங்களுக்கு குறையாமல் நடித்துவந்தார். ஆனால் அதன்பின் பட வாய்ப்புகள் குறைந்தபோது 'ஹிட்லிஸ்ட் என்ற படத்தையும் இயக்கினார்.. கடந்த வருடம் 'வீரம்' படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராகவும் நடித்திருந்தார்.


ஆனால் சில தினங்களுக்கு முன் வெளியான 'என்னு நிண்டே மொய்தீன்' படத்தில் படம் முழுவதும் வரும் நெகட்டிவான குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் லைம்லைட்டிற்கு வந்துள்ளார். பிருத்விராஜுடன் இவர் நடித்துள்ள மூன்றாவது படம் இது.. இதில் ஆரம்பத்தில் முஸ்லீமான பிருத்விராஜின் நண்பராக வந்து, பின்னர் அவர் தன் தங்கையை காதலிக்க ஆரம்பித்ததால், அவருக்கு எதிரியாக மாறும் வேடத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளார். இதைத்தவிர மோகன்லாலுடன் மீண்டும் இரண்டாவது முறையாக இணைந்து 'புலி முருகன்' படத்தில் நடித்து வருகிறார்.. ஆக மீண்டும் தனது கேரியரில் பிக்கப் ஆகிறார் பாலா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in