‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
டோலிவுட்டில், மோசகலக்கு மோசகடு, கிருஷ்ணம்மா களிபிண்டி இட்டரிணி போன்ற படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த சுதீர் பாபு, தற்போது பலே மஞ்சி ரோஜு என்ற படத்தில் நடித்து வருகின்றார். அறிமுக இயக்குநர் ஸ்ரீராம் ஆதித்யா இயக்கும் இப்படத்தில் சுதீர் பாபுவிற்கு ஜோடியாக வாமிகா நடிக்கின்றார்.இப்படத்தை விஜய் குமார் ரெட்டி மற்றும் சசிதர் ரெட்டி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடியும் தருவாயில் உள்ளது. இம்மாத இறுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்புகளை நிறைவு செய்து அடுத்த மாதத்தில் இப்படத்தை வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். சுதீர் பாபு தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தங்கை கனவர். மகேஷ் பாபுவின் பிறந்தநாளான கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெளியிடப்பட்ட இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.