தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
லத்திகா படத்தில் ஹீரோவாக நடித்தவர் டாக்டர் சீனிவாசன். அந்த படம் சுத்தமாக ஓடவில்லை என்றபோதும், அது ஒன்றை வைத்தே மிகப்பெரிய அளவில் பப்ளிசிட்டி செய்து தன்னை மார்க்கெட்டில் நிறுத்திக்கொண்டார். அந்த வகையில் தனது பெயருக்கு முன்பு பவர்ஸ்டார் என்ற பட்டத்தை சூட்டிக்கொள்ளவே அவர் பல லட்சங்களை செலவு செய்தார்.
அதையடுத்து சந்தானத்துடன் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா அவரது காமெடி கேரியரில் பெரிய ஹிட்டாக அமைந்தபோதும், பின்னர் மோசடி வழக்குகளில் சிக்கி ஜெயில் கம்பிகளை எண்ணச்சென்று விட்டதால் சீனிவாசனின் காமெடி மார்க்கெட் சரிந்தது. இருப்பினும், அழகன் அழகி, சும்மா நச்சுன்னு இருக்கு, யா யா, கோலிசோடா, ஐ, சகாப்தம், மாங்கா என பல படங்களில் நடித்தார் அவர்.
இதில் ஷங்கர் இயக்கத்தில் நடித்த ஐ படத்தில் டெரர் ஸ்டார் கீர்த்திவாசன் என்ற வேடத்தில் சில காட்சிகளில் வந்தாலும் சிரிக்க வைத்த டாக்டர் சீனிவாசன், மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த படத்தை போட்டி தயாரிப்பாளர் சங்கத்தை தொடங்கியிருக்கும் சிங்காரவேலன் தயாரிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்குவதை அடுத்து, தனது ரசிககோடிகளை ஒன்றுதிரட்டி தாரைத்தப்பட்டை என்று கோடம்பாக்கத்தின் காதுகளை கிழித்தெறிய தயாராகிக்கொண்டிருக்கிறார் சீனிவாசன்.