வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
வீரம் படத்தை அடுத்து சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 56வது படம் இறுகட்டத்தை எட்டியுள்ளது. அதேசமயம் போஸ்ட் புரொடக்சன்ஸ் வேலைகளையும் இன்னொரு பக்கம் முடுக்கி விடப்பட்டிருக்கிறது. இதற்கிடையே அஜீத்-ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட ஒரு டூயட் பாடலை கொல்கத்தாவில் படமாக்க திட்டமிட்டிருந்தார் சிவா. ஆனால் அது முடியாமல் போனதால், மீண்டும் கொல்கத்தாவுக்கோ அல்லது வேறு வெளிநாட்டிற்கோ சென்று படமாக்க முடிவு செய்திருக்கிறாராம்.
மேலும், தற்போது அஜீத்-வில்லன் கபீர்சிங் நடிக்கும் காட்சிகளில் ஆவேசமான நடிப்பை வெளிப்படுத்தி வரும் அஜீத், அனல் பறக்கும் டயலாக் பேசி நடித்து வருகிறார். அப்படி அஜீத் தற்போது பேசி வரும் வசனங்களில் நிறைய பஞ்ச் டயலாக்கும் உள்ளதாம். அதனால் இதற்கு தியேட்டர்களில் பலத்த கைதட்டல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கும் டைரக்டர் சிவா, இந்த தீபாவளியை தல தீபாவளியாக்கி விட வேண்டும் என்று தற்போது படப்பிடிப்பு, இறுதிகட்ட பணிகள் இரண்டையும் நடத்தி வருபவர், எடிட்டிங் பணிகளும் முடிந்து விட்டதால் விரைவில் டப்பிங் பணிகளை தொடங்குகிறாராம்.