இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் அறிமுகமான பூர்ணாவின் ஒரிஜினல் பெயர் ஷாம்னா காசிம். இவர் இப்போது கோடம்பாக்கத்தில் படு பிஸி. அர்ஜூனன் காதலி, கந்தகோட்டை, வித்தகன், துரோகி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் துரோகி படத்தை இயக்குபவர் சுதா. இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்த அனுபவத்துடன் துரோகியை இயக்கப் போகிறார். வித்தகன் படத்தை இயக்குபவர் பார்த்திபன். படத்தின் ஹீரோவும் அவரேதான். இதுபற்றி பூர்ணா கூறுகையில், எல்லோரும் ஏன் பார்த்திபன் மாதிரி பெரிய ஹீரோவுடன் நடிக்கிறாய்னு கேட்கிறாங்க. எனக்கு கேரக்டர் ரொம்ப முக்கியம். வித்தகனில் எனக்கு காமெடி கலந்த அழகான கேரக்டர். அந்த மாதிரி கேரக்டர் யாருக்கும் அமையாது. எனக்கு அமைஞ்சிருக்கு. கிடைச்சதை நான் பயன்படுத்திக்கிட்டேன், என்றார். இந்த படத்தில் ஒரு பாடல் காட்சிக்காக விஷ்ணு, சிவா, கிருஷ்ணா என்று 3 கிளிகள் பயன்படுத்தியிருக்கிறார்களாம். ஒரு கிளியின் விலை ரூ.1 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.