ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
தன் கணவர் மேடையில் தோன்றிபட்டணத்தில் பூதம். நாடகத்தில் நடித்ததைப் பார்க்க வந்திருந்த சினேகா பெரிதும் மகிழ்ச்சியடைந்தார். அவரை மேடைக்கு அழைத்தபோது தன் கருத்தை பளிச் புன்னகையுடன் கூறினார்.
"பிரசன்னா பட்டணத்தில் பூதம் நாடகத்தில் நடிக்கிறார் என்ற போது எனக்கு ஆச்சரியம் சந்தோஷம். நாடகத்தைப் பார்த்து விட்டு அசந்து விட்டேன். நாங்கள் ஆர்ட்டிஸ்ட் சினிமாவில் தான் நடிப்போம். படத்தில் நடிப்பது சுலபம். எத்தனை டேக் வாங்கினாலும் நடிக்கலாம். 25 டேக் கூட வாங்கலாம். நானும் அப்படி நிறைய டேக் வாங்கியிருக்கிறேன். மேடையில் ஒரே டேக் தான், அடுத்த டேக்கிற்கு வாய்ப்பே இல்லை. இதைப்பார்த்த போது பெருமையாக இருந்தது. சத்தியமாக என்னால் மேடையில் நடிக்கவே முடியாது. சாதாரணமாக நினைத்துக் கொண்டிருந்த நாடகத்தை கார்த்திக்ராஜா குழுவினர் பிரமாதமாக அமைத்து காட்டிவிட்டார்கள். இதில் நடித்த பிரசன்னாவை நினைத்து பெருமைப்படுகிறேன்." என்று சினேகா கூறினார்.