ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள சினிமாவில் கிட்டத்தட்ட இருபது வருட காலம் பின்னணி பாடகியாக வலம் வந்த ராதிகா திலக் புற்றுநோய் பாதிப்பினால் நேற்று மரணம் அடைந்தார்.. 45 வயதான இவர் சினிமாவில் இருபது வருடங்கள் இருந்தாலும் கூட, படங்களில் பாடியதென்னவோ சுமார் 7௦ பாடல்கள் வரைதான். மற்றபடி தொண்ணூறுகளில் தூர்தர்ஷனிலும், ஆல் இந்திய ரேடியோவிலும் பிரபலமான பாடகியாக இவர் திகழ்ந்தார்.. அதுமட்டுமல்ல, மேடைக்கச்சேரிகள் பரபரப்பாக இருந்த காலகட்டத்தில் மோஸ்ட் வான்ட்டட் பின்னணி பாடகியாக இருந்தவர்தான் இந்த ராதிகா திலக்..
தமிழில் விஜய் நடித்த 'ஷாஜகான்' என்கிற படத்தில் மீனா பாடும் 'சரக்கு வச்சிருக்கேன்' சூப்பர்ஹிட் பாடல் இவர் பாடியது தான். இளையராஜா, வித்யாசாகர், மணிஷர்மா, உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார் ராதிகா திலக். பிரபல பின்னணி பாடகிகளான சித்ரா, சுஜாதா ஆகிய இருவரின் செல்வாக்கு ஓங்கியிருந்ததால் அவர்களை தாண்டி மலையாள திரையுலகில் இவரால் மிகப்பெரிய அளவில் பிரகாசிக்க முடியவில்லை.. புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி, அவ்வப்போது சிகிச்சை எடுத்துவந்த, இவர் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் மரணத்தை தழுவினார்.