Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எழிலின் சொந்த படத்தில் விஷ்ணு!

21 செப், 2015 - 08:10 IST
எழுத்தின் அளவு:
Vishnu-Vishal-in-Ezhil-fil

விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் மெகா ஹிட் படத்தை இயக்கியவர் எழில். அதையடுத்து அஜீத் நடித்த பூவெல்லாம் உன் வாசம், உள்பட பல படங்களை இயக்கினார். ஒரு கட்டத்தில் அவரது மார்க்கெட் சரிந்ததால் சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்திப்பறவையில் ரீ-என்ட்ரியான எழில், பின்னர் விமலை வைத்து தேசிங்குராஜா, விக்ரம்பிரபு நடிப்பில் வெள்ளக்கார துரை ஆகிய படங்களை இயக்கி மீடியம் ஹிட் படங்களாக கொடுத்தார்.


இந்த நிலையில், தனது மனம் கொத்திப்பறவை படத்தில் நடித்த சிவகார்த்திகேயனின் மார்க்கெட் தற்போது திருப்தியாக இருப்பதால் அவரை வைத்து படம் இயக்க ஆசைப்படுகிறாராம் எழில். ஆனால் மேடைகளில் தான் நடித்ததில் பிடித்த படங்களை குறிப்பிடும் சிவகார்த்திகேயன், எழிலின் மனம் கொத்திப்பறவை படத்தை மட்டும் குறிப்பிடுவதே இல்லையாம். அதன்காரணமாக தனது படத்தை பிடித்த பட பட்டியலிலேயே வைத்திராத சிவகார்த்திகேயனிடம் எப்படி மறுபடியும் கால்சீட் கேட்பது என்று தயங்கி நிற்கும் எழில், தான் அடுத்து இயக்கும் படத்தில் நடிக்க விஷ்ணுவை புக் பண்ணியிருக்கிறாராம்.


அதோடு, அந்த படத்தில் நடிப்பதற்கு தற்போது மார்க்கெட்டில் இருக்கும் சில நடிகைகளிடம் கால்சீட் கேட்டு வரும் எழில், அந்த படத்தையும் கிராமத்து காதல் மற்றும் காமெடி கதையிலேயே இயக்குகிறாராம். மேலும், அப்படத்தை எழில் சொந்த பேனரிலேயே தயாரித்து இயக்குவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது அப்படத்திற்கான கம்போஸிங் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. கோழிக்கூவுது உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்த ராம்ராஜ் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in