தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பரத், கதிர் இணைந்து நடிக்கும் படம் என்னோடு விளையாடு. பரத் ஜோடியாக சாந்தினியும், கதிர் ஜோடியாக சஞ்சிதா ஷெட்டியும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர ராதாரவி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். யுவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், மோசஸ் இசை அமைக்கிறார். ரேயான் ஸ்டூடியோ சார்பில் கே.கீதா கிருஷ்ணசாமி தயாரிக்கிறார். அருண் கிருஷ்ணசாமி இயக்குகிறார்.
"பரத், கதிர் இருவரும் இரு முரண்பட்ட வாழ்க்கையை கொண்டவர்கள். இருவரும் இணைந்து ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்கள். அவரவர் பாணியில் அந்த பிரச்சனையிலிருந்து வெளிவர நினைக்கிறார்கள். ஆனால் சிக்கல் பெரிதாகிக் கொண்டுதான் போகிறது. இருவரும் இணைந்து ஒரே நேர்கோட்டுக்கு வந்து பிரச்சனையை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்கிற கதை. காதல், ஆக்ஷன், அதிரடி திருப்பங்கள் நிறைந்த கதை. சென்னை, புதுச்சேரி, பெங்களூரு, மைசூர் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்த வருகிறது. தீபாவளிக்கு படத்தை கொண்டு வரும் முனைப்போடு பணியாற்றி வருகிறோம்" என்கிறார் இயக்குனர் அருண் கிருஷ்ணசாமி.