பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்திருக்கும் சிரிப்பு நடிகர் ரோபோ சங்கர். சினிமாவில் தலைகாட்டிய சில மாதங்களிலேயே பல தரப்பிலும் கெட்டபெயரை சம்பாதித்து வருகிறார். கோடி கோடியாய் பணம் போட்டு படம் எடுக்கிறவங்ககிட்ட இந்த மீடியாக்காரங்க..... மாதிரி கேள்வி கேக்குறாங்க என்று தன் நண்பர்கள் வட்டாரத்தில் ரோபோ சங்கர் கமெண்ட் அடித்ததாக சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியாகி, செய்தியாளர்கள் கொலவெறியானார்கள். என் குழந்தை மீது சத்தியமாக நான் அப்படி சொல்லவில்லை என்று ரோபோ சங்கர் சத்தியம் செய்த பிறகு பிரச்சனை அடங்கியது.
இந்நிலையில் இப்போது புதிய பிரச்சனையில் சிக்கியுள்ளார் ரோபோ சங்கர். கடந்த 16ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டிருந்தார் ரோபோ சங்கர். “தல படத்தைப் பற்றி அதிகாரப்பூர்வ செய்தி ஒன்று இன்று மதியம் 1 மணிக்கு வெளியாகப் போகிறது. இது தல ரசிகர்களுக்கு கண்டிப்பாக ஒரு சர்ப்ரைஸாக இருக்கும்” என்று அதில் அவர் தெரிவித்திருந்தார்.
ரோபோ சங்கர் குறிப்பிட்ட அந்த அறிவிப்பு அனேகமாக படத்தின் தலைப்பாகத்தான் இருக்கும் என்று நினைத்த அஜித் ரசிகர்கள் பரபரப்பானார்கள். தல 56 படத்திற்கு ஏற்கெனவே 'வரம்', 'அடங்காதவன்', 'ஆரவாரம்' ஆகிய தலைப்புகள் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனவே இவற்றில், ஏதாவது ஒன்றுதான் படத்தின் தலைப்பாக இருக்கும் என்றெல்லாம் அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
கடைசியில் ரோபோ சங்கர் சொன்னபடி எதுவுமே நடக்கவில்லை. அஜித் ரசிகர்கள் ரோபோ மீது செம கடுப்பில் இருப்பது ஒரு பக்கம் இருக்க, இந்த தகவலை அறிந்த தல 56 படத்தின் இயக்குநர் ரோபோ சங்கரை அழைத்து கடிந்து கொண்டாராம்.