ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கிழக்கே உதித்த காதல், காலைப்பொழுதினிலே, கள்ளத்தனம், சவ்வு மிட்டாய் ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் சி.ஆர்.ரவிகிரண். அந்த படங்களைத் தொடர்ந்து பருத்தி, நீங்கள் டயல் செய்த எண்ணை சரி பார்க்கவும், சுருளி போன்ற படங்களுக்கு இசையமைத்து வரும் இவர், எங்க வீட்ல கல்யாணம் உங்க வீட்ல சாப்பாடு -என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
தான் ஹீரோவானது பற்றி ரவிகிரண் கூறுகையில், நான் சினிமாவிற்குள் நடிகனாக வேண்டும் என்றுதான் வந்தேன். சில படங்களில் சிறிய வேடங்களிலும் நடித்தேன். ஆனபோதும் ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் இசையும் எனக்கு தெரியும் என்பதால் இசையமைப்பாளராகிவிட்டேன். அதோடு எனக்கு கதை எழுதுவதிலும் ஆர்வம் உண்டு. மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸில் நாடகம் நடத்தியிருக்கிறேன். நான் எந்தவொரு கதை எழுதினாலும் கடைசியில் அது காமெடியில்தான் முடியும்.
மேலும், காமெடியில் எனக்கு அதிக ஈடுபாடு உள்ளது என்பதால் இந்த படத்தில் காமெடி ஹீரோவாகத்தான் நடிக்கிறேன். இன்னொரு ஹீரோவாக மஞ்சுநாத் நடிக்கிறார். அதோடு, காமெடி ஹீரோவாக மட்டுமே நடிப்பேன். மற்றபடி காமெடியனாக நடிக்க மாட்டேன். இந்த எங்க வீட்ல கல்யாணம் உங்க வீட்ல சாப்பாடு படத்திற்கு நானே இசையமைக்கிறேன். ஐந்து பாடல்களை கம்போஸ் செய்து விட்டேன். அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் படப்பிடிப்பு நடக்கயிருக்கிறது என்ற கூறும் இசையமைப்பாளர் சி.ஆர்.ரவிகிரண், எதிர்காலத்தில் நடிப்பு, இசை, தயாரிப்பு, டைரக்ஷன் என நான்கு துறைகளில் கவனம் செலுத்த திட்டமிட்டிருப்பதாகவும் சொல்கிறார்.