இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
முக்கோண காதல் கதையாக டோலிவுட்டில் உருவாகும் கொலம்பஸ் படத்தில் நாயகனாக நடிகர் சுமந்த் அஸ்வின் நடிக்கின்றார். சுமந்த் அஸ்வின் இறுதியாக நடித்த கேர்நிதா படத்தில் அவரது நடிப்பு பேசும்படியாக அமைந்திருந்தது. இந்நிலையில் சுமந்த் நடிக்கும் கொலம்பஸ் படத்தில் ரன் ராஜா ரன் படப் புகழ் நடிகை சீரத் கபூர் மற்றும் சின்னடன நீ கோசம் படத்தில் பிரபலமடைந்த நடிகை மிஸ்தி சக்ரபோர்த்தி ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் ரமேஷ் சாமளா இப்படத்தை இயக்குகின்றார். இப்படத்தின் தயாரிப்பாளர் அஸ்வனி குமார் கூறும் போது இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பெற்று தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளார். மேலும் விரைவில் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜித்தின் ரோஷன் இசையமைத்துள்ளார். விரைவில் இப்படத்தை திரைக்கு கொண்டு வரவும் படக்குழு முடிவு செய்துள்ளது.