ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கும்கி புகழ் லட்சுமிமேனன் கிராமத்து செண்டிமென்ட் கதைகளுக்கு பேர்போனவராகி விட்டார். கிராமத்து காதல், பாசம் இரண்டுக்குமே அவரது தோற்றம் கனகச்சிதமாக இருப்பதாக சொல்லித்தான் அவரை இயக்குனர்கள் புக் பண்ணி வந்தனர். ஆனபோதும், நன்றாக போய்க்கொண்டிருந்தபோது லட்சுமிமேனனுக்கும் எதிர்பாராத சறுக்கல்.
இருப்பினும், கொம்பன் ஹிட்டுக்குப்பிறகு இப்போது அஜீத்தின் 56வது படத்தில் அவருக்கு தங்கையாகவும், ஜெயம்ரவி நடிக்கும் மிருதன் படத்திலும் நடித்து வருகிறார். இதில் அஜீத் படத்தில் தங்கை வேடத்தில் நடிக்க அழைத்தபோது சில நடிகைகள் மிரண்டு ஓட, லட்சுமிமேனன்தான் உடனே ஓகே சொல்லி கமிட்டானார்.
அதோடு, படப்பிடிப்பில் அஜீத்துக்கு தங்கையாக நடிக்கும்போது பாசமழை பொழிந்த லட்சுமிமேனன், அந்த யூனிட்டில் இருந்த ஒவ்வொரு நாளுமே அவரை தனது அண்ணனாக நினைத்தே பேசிப்பழகினாராம். அதோடு தனது தாய்மொழியான மலையாளத்தில் சேட்டன் என்றே அஜீத்தை அழைத்தாராம். அந்த அளவுக்கு பாசக்கார தங்கையாகிப்போன லட்சுமிமேனன், அஜீத்துடன் நிறைய போட்டோக்களை எடுத்துக்கொண்டவர், அதை இணையதளத்திலும் அப்டேட் செய்து ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டு வருகிறார்.