அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
நடிகர் திலகம் சிவாஜி நடித்த கர்ணன், வசந்த மாளிகை, திருவிளையாடல், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய படங்கள் இதுவரை டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு நவீன தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட்டது. இப்போது இந்த வரிசையில் அடுத்து வருகிறது ராஜபார்ட் ரங்கத்துரை.
1973ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் சிவாஜியுடன் உஷா நந்தினி, நம்பியார், வி.கே.ராமசாமி, மனோரமா, டி.கே.பகவதி நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். பி.என்.சுந்தரம் ஒளிப்பதிவு செய்திருந்தார். சித்ரமாலயா கம்பைன்ஸ் சார்பில் வி.சி.குகநாதன் தயாரித்திருந்தார். பி.மாதவன் இயக்கி இருந்தார்.
ஒரு ஏழை நாடக நடிகனின் வாழ்க்கை கதை. இதில் சிவாஜி நாடக நடிகராக பிரமாதமாக நடித்திருப்பார், பகத்சிங், திருப்பூர் குமரன், முருக கடவுள், கோமாளி வேடங்களில் நடித்திருக்கும் காட்சிகள் பிரமிக்க வைக்கும். சிவாஜி ரசிகர்களுக்கு மற்றுமொரு விருந்து காத்திருக்கிறது. படம் அடுத்த மாதம் வெளிவருகிறது. அபி சினி ஆர்ட்ஸ் சார்பில் ஸ்ரீ பூஜா வெளியிடுகிறார்.